பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை கடற்படை ஆதரவு
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (மார்ச் 23) கோலாகலமாக இடம்பெற்றது. இதுக்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் பல கத்தோலிக்க பக்தர்கள் கழந்துகொன்டனர்.
இந்த திருவிழா வெற்றிகரமாக நடத்த, வடக்கு கடற்படை கட்ளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை ஆதரவு வழங்கியது. இந்த ஆண்டு திருவிழாவுக்காக யாழ்ப்பாணம், நெடுந்தீவு, குறுநகர், நாவாந்துறை, பாசையூர், வலைப்பாடு, இரனைமதநகர், பள்ளிக்குடா, மாந்ததீவு, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலிருந்து சுமார் 5000 க்கு மேற்பட்ட கத்தோலிக்க பக்தர்கள் வருகைதந்திருந்தனர். குறித்த பண்டிகையில் யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜோஸப் ஜெபரத்னம் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர்,வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி, வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி உடபட கடற்படை அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வடக்கு கடற்படை கட்டளை தளபதியின் அறிவுரைகள் படி இலங்கை கடற்படை கப்பல் கன்சதேவ நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் துஷார உடுகமவின் மேற்பார்வையின் கீழ் குறித்த நிகழ்விற்கு வருகைதந்த பக்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான கடல் போக்குவரத்து வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், முகாம்கள் அமைத்தல், உணவு, மருத்துவ வசதிகள், கடல் ஆம்புலன்ஸ், சுகாதார மற்றும் குடிநீர் வசதிகள், ஆகியவற்றுடன் பக்தர்கள் பாதுகாப்புக் கருதி விஷேட கடற்படை பிரிவின் உயிர் காக்கும் படையினர் சேவையும் வழங்கப்பட்டது.
|