இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக 04 ஆஸ்திரேலிய கப்பல்கள் இலங்கைக்கு வருகை
ஆஸ்திரேலிய ராயல் கடற்படையின் கென்பரா, நிவுகாசல், சக்ஸஸ் மற்றும் பெரமடா ஆகிய 04 ஆஸ்திரேலிய கப்பல்கள் இன்று காலை (மார்ச் 23) இலங்கை வந்தடைந்துள்ளன. அதன் படி ‘கென்பரா’ மற்றும் நிவுகாசல் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கும் சக்ஸஸ் மற்றும் பெரமடா கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்துக்கும் வந்தடைந்துள்ளன. வந்தடைந்த இக் கப்பல்களை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.
இந்திய பெருங்கடலில் பொது பாதுகாப்பு பற்றி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா கூட்டு பணி குழுவில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை குழுக்கள் இந்த வேலைத்திட்டத்திற்கு வந்துள்ளன. அதன் படி மனிதாபிமான அனர்த்த நிவாரணம் வழங்குதல், கப்பல்கள் இடையே ஹெலிகாப்டர்கள் பரிமாற்றம், கடல் பலம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், இரு நாடுகளின் முப்படையினர் இடையே இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு செயல்பாடுகள் ஆகிய பல திட்டங்கள் நடைபெற உள்ளது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடையின்த கென்பரா கப்பலின் கொடி அதிகாரியாக எயார் கொமடோர் ரிசட் ஒவன் பணியாற்றிகிரதுடன் கேப்டன் ஏஷ்லி எம் பெப் கட்டளை அதிகாரியாக பணியாற்றிகிரார். சுமார் 27500 தொன்கள் எடையுடைய இக் கப்பல் 230.9 மீட்டார் நீளம் மற்றும் 7.9 மீட்டார் அகலம் கொண்டதுடன் 483 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. நிவுகாசல் கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமான்டர் அனீடா செலிக் பெண் அதிகாரி பணியாற்றிகிரார். சுமார் 4200 தொன்கள் எடையுடைய இக் கப்பல் 138.1 மீட்டார் நீளம் மற்றும் 7.9 மீட்டார் அகலம் கொண்டதுடன் 205 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை வந்தடையின்த சக்ஸஸ் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் டிரகன் ஜி கோகன் பணியாற்றிகிரார். சுமார் 17900 தொன்கள் எடையுடைய இக் கப்பல் 157.2 மீட்டார் நீளம் மற்றும் 8.4 மீட்டார் அகலம் கொண்டதுடன் 178 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. பெரமடா கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமான்டர் டீ வேன் டயின்ஹொவன் பணியாற்றிகிரார். சுமார் 3900 தொன்கள் எடையுடைய இக் கப்பல் 118 மீட்டார் நீளம் மற்றும் 6.2 மீட்டார் அகலம் கொண்டதுடன் 190 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.
மேலும், சக்ஸஸ் மற்றும் பெரமடா கப்பல்கள் ஆம் மார்ச் 27 ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளதுடன் கென்பரா, நிவுகாசல் கப்பல்கள் மார்ச் 30 ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளது.
|