600 வது நீர் சுத்திகரிப்பு நிலைம் திறந்து வைக்கப்பட்டது
அநுராதபுரம், இசுறுமுனிய ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 600 ஆவது நீர் சுத்திகரிப்புத் தொகுதி இன்று (மார்ச் 20) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக மகா சங்கத்தினர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, அமைச்சர்கள் உட்பட இப் பகுதி மக்களும் கலந்துகொண்டனர்.
அநுராதபுரம், இசுறுமுனிய ரஜமகா விகாரை வணங்க வருகின்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய குறித்த நீர் சுத்திகரிப்பு நிலைம் திறந்து வைக்கப்பட்டது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கருத்துப்படி இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக தற்போது இலங்கையின் பல மாவட்டங்களில் ஏராளமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையின் பல பகுதிகளில் 1.5 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க படுகின்றது.
மேலும், சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|