இலங்கை கடற்படை கப்பல் சாகர “ லீமா கண்காட்சி – 2019” இல் பங்கேற்பு
மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல் சாகர இன்று (மார்ச் 19) திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. குறித்த கப்பலில் 180 கடற்படை வீரர்கள் சென்றுள்ளனர். இங்கு கடற்படை இசைகுழு நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டதுடன் இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை ரியர் அட்மிரல் ஆனந்த குருகே உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.
மேலும் இன் விஜயத்தின் போது கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் அநில் போவத்த நடவடிக்கைகள் மேற்கொள்கிரார்.
குறித்த கண்காட்சியானது ஆசியாவின் பசுபிக் பிராந்தியத்தில் ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறுகின்ற மிகப்பெரிய கடல்சார் கண்காட்சியாகும். உலகம் பூராகவுமுள்ள நாடுகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் வனிகவியல் துறைகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்குபற்ற உள்ளனர். இந்த முறை இப் பயிற்சி மற்றும் கண்காட்சி 15 வது முறையாக நடைபெறும்.
மேலும், இக்கண்காட்சியானது இம்மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிவரும் 30ம் திகதி நிறைவு பெறவுள்ளது. இக்கண்காட்சிக்கு கலாச்சார நிகழ்ச்சிகள், கப்பல்கள் கண்காட்சி, கடற்படை மற்றும் விமான ஒருங்கிணைந்த பயிற்சிகள் உட்பட பல சிறப்பு திட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
|