இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் கடல் நீச்சல் போட்டிதொடரில் ஆண் பிரிவு முதலிடம் கடற்படைக்கு
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2 கிலோ மீட்டர் கடல் நீச்சல் போட்டிதொடர் நேற்று (மார்ச் 16) இலங்கை உயிர்காப்பு பாடசாலை அமைந்துள்ள பம்பலபிட்டி கடற்கரையில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது. இதுக்காக கடற்படையின் பல விழையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர்.
மேலும் இப் போட்டித்தொடருக்காக முப்படையினர் உட்பட நாடு முழுவதும் உள்ள நீச்சல் சங்கங்களில் இருந்து 400 க்கு மேற்பட்ட விழையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் போட்டியை நிரைவுசெய்து “இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் சவால் கின்னம்” கடற்படையின் நதீர பெரேரா பெற்றுள்ளார்.
நீச்சல் போட்டிதொடரில் பிரதம அதிதியாக இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க கழந்துகொன்டுள்ளதுடன் இன் நிகழ்வுக்காக கடற்படை இயக்குனர் விளையாட்டு, கொமடோர் ஜயந்த கமகே உட்பட முப்படையின் அதிகாரிகள் மற்றும் விழையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டுள்ளனர்.