91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 17) காலை பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது. குறித்த கஞ்சா பொதி இலங்கை எல்லை ஊடாக இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் திக்கம் பகுதிகளில் வசிக்கின்ற 47 மற்றும் 60 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்த ஆண்டுக்குள் மட்டும் கடற்படை நடவடிக்கைகள் மூலம் 770 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருடைய கருத்தின் படி இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் தடுப்பு திட்டத்துக்காக கடற்படை முழு பங்களிப்பை வழங்குவதுடன் இலங்கை சுற்றி உள்ள கடலில் மற்றும் கடலோரப் பகுதி முழுவதும் மேற்கொள்கின்ற ரோந்து நடவடிக்கைகள் காரணத்தினால் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் வெற்றிகரமாக தடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.