இந்திய மீனவர்களினால் பிடிக்கப்பட்ட கடலாமை இலங்கை கடற்படையினரினால் மீட்பு
கடற்படை கப்பலொன்றில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த பெப்ருவரி 24 ஆம் திகதி வடக்கு கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகொன்று கண்கானிக்கப்பட்டது. குறித்த மீன்பிடி படகை கடற்படையினரினால் சோதிக்கும் போது மீனவர்களினால் பிடிக்கப்பட்ட கடலாமையொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் கண்டுபிடிக்கப்பட்ட கடல் ஆமையை கடற்படையினரினால் பாதுகாப்பாக கடலுக்கு விடப்பட்டது.
அழிந்து போகும் விலங்குவாக பெயரிடப்பட்ட 07 வகையான கடலாமைகள் உலகம் முழுவதும் காணலாம் அதன் 5 வகைகளில் ஆமைகள் இலங்கை கடலில் காணப்படுகின்றன. குறித்த அழிந்து போகும் விலங்குகளை பாதுகாக்க இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதாக இலங்கை கடற்படை மூலம் கடலாமை பாதுகாப்பு திட்டமொன்று தொடங்கப்பட்டதுடன் அதன் படி அடையாளம் கானப்பட்ட பாதுகாப்பான கடற்கரைகளில் பாதுகாக்கப்பட்ட ச்மார் 5,700 கடலாமைகள் கடற்படையினரினால் கடலுக்கு விடப்பட்டது.
இவ்வாரு இலங்கை கடற்படை கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கு நேரடியாக தனது பங்களிப்பை வழங்கும்.
|