மேலும் கடற்படையினரினால் 751.94 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மன்னார், மனல்பாரை நாங்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 03 புகையிலை பொதிகள் கண்டுப்பிடிக்கப்பபட்டது. அதன் படி நேற்று (மார்ச் 11) மேற்கொன்டுள்ள கடற்படை சிறப்பு நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த புகையிலை 751.94 கிலோ கிராம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது 16 பொதிகளாக உள்ளது.

குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. கடத்தல்காரர்களால் கடந்த தினங்களில் குறித்த புகையிலை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தாலும் கடற்படை மேற்கொள்கின்ற ரோந்து நடவடிக்கைகள் காரணத்தினால் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் வெற்றிகரமாக தடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று 04 கடத்தல்காரர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டதுடன் இந்த ஆண்டுக்குழ் மட்டும் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட புகையிலை 3404.21 கிலோ கிராம் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.