1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 10) மன்னார், ஊருமலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 15 புகையிலை பொதிகளுடன் நான்கு பேர் (04) கைது செய்யப்பட்டது. மேலும் கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கைகளின் போது மன்னார், ஊருமலை பகுதியில் வைத்து 03 புகையிலை பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் படி கடற்படையினர்களினால் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கைகளின் போது 706.32 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த புகையிலை பொதிகளாக உள்ளதுடன் இது இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றது. குறித்த சந்தேகநபர்கள் மன்னார் பேசாலை பகுதியில் வசிக்கும் 26, 33,34 மற்றும் 39 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.
மேலும் நேற்று நெடுந்திவுக்கு தெக்கு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 39.8 கிலொகிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி இந்த ஆண்டுக்குழ் மட்டும் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட புகையிலை 2652.27 கிலோ கிராம் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
|