கடற்படை நடவடிக்கைகளின் போது மேலும் 1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது
வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 07) மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கைகளின் போது 1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் படி நேற்று மற்றும் இன்று கடற்படையினர்களினால் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கைகளின் போது 1377.15 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த புகையிலை பொதிகளாக உள்ளதுடன் இது இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றது. குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்க உள்ளது.
கடற்படை இலங்கை சுற்றி உள்ள கடலில் மற்றும் கடலோரப் பகுதி முழுவதும் மேற்கொள்கின்ற ரோந்து நடவடிக்கைகள் காரணத்தினால் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் வெற்றிகரமாக தடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கடற்படை வழங்கிய தகவலின் படி மன்னார் நூர் வீதியில் வைத்து 529 புகையிலை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
|