சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த 30 பேர் கடற்படையினரினால் கைது
இலங்கை கடல் பகுதியில் ஏற்படக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்குவதுக்காக ரோந்து நடவடிக்கையின் ஈடுபட்ட தெக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகுகளின் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இன்று (மார்ச் 07) காலையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக பயநித்த ஒரு கப்பலொன்றுடன் முப்பது பேர் (30) கைது செய்யப்பட்டது.
அதன் பிரகாரமாக காலி கலங்கரை விளக்கிலிருந்து 80 கடல் மைல்கள் தூரத்தில் சந்தேகத்திற்கிடமான டோலர் படகொன்று பயனிப்பதை கடற்படையினரினால் கண்காணிக்கப்பட்டது. அதன் படி குறித்த படகு உள்ள பகுதிக்கு தெக்கு கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் படி சட்டவிரோதமாக இலங்கை விட்டு கடல் வழியாக வெளியேற முயற்சித்த (30) பேர் கைது செய்ய்ப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்களாகவும் கடற்படையின் விசாரணைகள் மற்றும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இன்னும் குடிவரவு சட்டம் கடினமாக செயற்படுத்தப்படும் இக்காலக்கட்டத்தில் சட்ட விரோத முறைகளை உபயோகித்து ஒருபோதும் வெளிநாட்டுக்கு செல்ல முடியாதபடியும் அதற்காக முயற்ச்சி செய்யும் நபர்களுக்கு, மனித நாடு கடத்தல் பிடிபடுதலால் உயிர்கள் ஆபத்தடைதல், செல்வம் அழிக்கப்படுதல், இறுதியாக குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்டு தமது எதிர்காலம் இருட்டாக்கப்படுகின்றது.
அதே போன்ற இலங்கை கடற்படை மூலம் கடலில் மற்றும் கடலோரப் பகுதி முழுவதும் மேற்கொள்கின்ற ரோந்து நடவடிக்கைகள் காரணத்தினால் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாரான சட்டவிரோத குடியேற்றங்கள் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளும் வெற்றிகரமாக தடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
|