"சயுரள" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் தாயகம் திரும்பியது
பாகிஸ்தான் கடற்படையினர் ஏற்பாடுசெய்யதிருந்த "அமன் 2019" பயிற்சியில் கலந்துகொண்ட பின்னர் தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் "சயுரள" கப்பல் நேற்று (பெப்ரவரி, 28) தாயகம் திரும்பியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாகிஸ்தான் கடற்படையினரால் நடாத்தப்படும் இப்பயிற்சியில் பங்கேற்பதற்காக சயுரள கப்பல் கடந்தமாதம் (பெப்ரவரி) 02ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்தமாதம் (பெப்ரவரி) 08ம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற "அமன் 2019" கடற்படை பயிற்சியில் ஆவுஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேஷியா, மாலைதீவு, நைஜீரியா, பிலிப்பைன், கட்டார், ரஷ்யா மற்றும் இலங்கை உற்பட 44 நாடுகள் பங்கேற்றன.
பாகிஸ்தான் கடற்படை ஏற்பாடுசெய்திருந்த பன்னாட்டு கடற்படை பயிற்சியான "அமன் 2019" இல் கலந்துகொண்ட பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இடம்பெற்ற ஐடிஈஎக்ஸ் 2019 என அறியப்படும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக "சயுரள" கப்பல் சென்றிருந்தது. இந்நிகழ்வானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமன் கடற்படை பயிற்சி – 2019
சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு – 2019
|