42.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் அதிகாரிகள் இனைந்து மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (பெப்ருவரி 28) காலையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 42.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.
குறித்த சந்தேகநபர் மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 37 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே போன்ற வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விரைவு தாக்குதல் கப்பலின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களினால் நேற்றய தினமும் (பெப்ருவரி 27) பருத்தித்துறை வடக்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது. எதிர்காலத்திலும் இலங்கையில் போதைப் பொருட்கள் கட்டுப்பாடுக்காக தன்னுடைய பங்களிப்பு வழங்குவதில் கடற்படை ஈடுபட்டு வருகின்றது.
|