மேலும் அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது
கிழக்கு கடற்படை கட்டளையின் மரையின் வீரர்கள், இலங்கை பொலிஸார் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் இனைந்து நேற்று (பெப்ருவரி 22) பெரியகின்னியா, திப்பன்செட்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் படி திப்பன்செட்டி பகுதியில் மகாவலி ஆற்றின் அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் சுமார் 15.000 கியுப் கண்டுபிடிக்கப்பட்டது. மணல் பொதி தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொள்கின்றது.
மேலும் கடந்த பெப்ருவரி 20 ஆம் திகதியும் இந்த பகுதியில் அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் சுமார் 15.000 கியுப் கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவி வழங்கப்பட்டது. இவ்வாரு சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளினால் மகாவலி ஆற்றின் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகள் அழிக்கப்படுகின்றது. இது மகாவலி கங்கை பயன்படுகின்ற மக்களுக்கு இது ஒரு பெரிய இழப்பாகும். இவ்வாரான மணல் கடத்தல்கள் தொடர்பான ஊழல்களை கட்டுப்படுத்துவதற்க்கு கடற்படை ஆதரவுடன் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இலங்கை பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.