சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 05) கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 02 வலைகள், நான்கு டிங்கி படகுகள் மற்றும் பிடிக்கப்பட்ட 2487 கிலோ கிராம் மீன் கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது. அதன் படி கைது செய்யப்பட்ட நபர்கள், சட்டவிரோத வலைகள், படகுகள் மற்றும் மீன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த பிப்ரவரி 02 ஆம் திகதியும் இந்தப் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேருடன் 04 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது. இவ்வாரான நடவடிக்கைகளை ரத்து செய்ய அரசாங்கத்தின் வழிகாட்டலின் முன்னணியில் இலங்கை கடற்படை முன்னணி வகித்து செயற்படுவதுடன், கடல் வலத்தை பாதுகாக்க கடற்படை நிலையான கவனத்தை செலுத்திகின்றது.