உலக ஈரநிலங்கள் தினத்துக்கு கடற்படையின் பங்களிப்பு
ஈரநிலங்களின் மதிப்பை உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஈரநில தினம் பெப்பரவரி 02 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் ஈரானின் ரம்ஸார் நகரில் இடம்பெற்ற சர்வதேச ஈரநில ஒப்பந்தத்திற்கு அமைய, இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கருப்பொருள் “ஈரநிலங்கள் மற்றும் காலநிலை மாற்றம்” ஆகும்.
இதுக்காக கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வொன்று வட மேல் கடற்படை கட்டளையின் இடம்பெற்றது. அங்கு சுமார் 1000 க்கு மேற்பட்ட சதுப்புநில தாவரங்கள் கடற்படையினரினால் மற்றும் சிவில் அமைப்புகளினால் நடுவப்பட்டது.
இந்த திட்டத்துக்காக வட மேல் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரோஹித பேரேரா உட்பட வடமேல் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மீனவர்கள் மற்றும் பாடசாலை மானவர்கள் அதிக அளவில் பங்குப் பெற்றனர். மேலும் இன் நிகழ்வுக்காக வட மேல் கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகு படையனி, இலங்கை கடற்படை கப்பல் பரன, விஜய, தேரபுத்த மற்றும் தம்ப்பன்னி ஆகிய நிருவனங்களிலும் இவ்வாரு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே போன்ற தற்போதைய கடற்படைத் தளபதி மற்றும் கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டக் குழுவின் பிரதானி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் முழு மேற்பார்வையின் கீழ் கடற்படை பல சதுப்புநில திட்டங்கள் இலங்கையில் உள்ள ஏரிகள் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழங்களில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக வடக்கு, வட மத்திய, வடமேல் மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பு ஆகியவைற்றின் குறித்த திட்டம் இப்போது செயல்படுத்தப்படுகிறது. அதன் முக்கிய குறிக்கோள் இலங்கைக்கு சொந்தமான கடற்கரை பாதுகாத்தலாகும்.