சுகயீனமுற்ற மீனவரை கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டன
 

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகயீனமுற்றத்தினால் மீனவர் ஒருவரை கடற்படையினரால் இன்று (பிப்ரவரி 01) கரைக்கு கொண்டுவரப்பட்டது. இம் மீனவர் கடந்த ஜனவரி 01 ஆம் திகதி 'வத்சலா' மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பேருவல மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகயீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டுவருவதற்காக தென் கடற்படை கட்ளையின் அதிவேக தாக்குதல் படகொன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதன் படி காலி கலங்கரை விளக்கத்துக்கு 172 கடல் மைல்கள் தூரத்தில் சர்வதேச கடலில் இருந்து குறித்த மீனவரை பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு கப்பல் உரிமையாளருக்கு ஒப்படைக்கப்பட பின் அவரினால் மீனவரை மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மக்களை காப்பாற்றவும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரவும் கடற்படையினர் செயல்பட்டனர். இதேபோல், இலங்கை கடற்படை எதிர்காலத்திலும் இதே போன்ற மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.