சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை நடவடிக்கைகள்
 

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தளபதி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய கருத்தின் படி மகாவலி ஆற்றில் நடக்கின்ற சட்டவிரோதமான மணல் கடத்தல் தொடர்பான ஊழல்களை கட்டுப்படுத்துவதற்க்கு கடற்படை ஆதரவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். அதன் படி கடந்த தினங்களில் கந்தக்காடு பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இனைந்து மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது பல மணல் கடத்தல் செய்யும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று (ஜனவரி 28) கந்தக்காடு பகுதியில் மகாவலி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 06 படகுகளும் இன்றைய தினம் (ஜனவரி 29) காலையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லொரி வண்டிகளும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளது. அதன் படி நேற்றும் இன்றைய தினமும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றய தினம் காலையில் கந்தக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படைக்கு எதிராக மணல் கடத்தல் செய்யும் நபர்கள் உட்பட அப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் மணல் கடத்தல் செய்யும் நபர்களை கைது செய்யும் போது மூன்று (03) மணல் கடத்தல்காரர்கள் ஆற்றில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாரு தப்பிச் சென்ற மூவரை கைது செய்யும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆத்திர மூட்டும் வகையில் செயல்பட்ட மணல் கடத்தல்காரரக்ளும் அப் பிரதேச மக்களும், கடற்டையினருக்கு தாக்குதல் செய்ய முயற்சித்த போது கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுப்படுத்த, கடற்டையினரினால் வானத்தை நோக்கி இரண்டு துப்பாக்கிச் சூடுகள் விடப்பட்டது. தற்போது சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீர்ர்கள் சூழ்நிலையை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஆத்திரமூட்டும் வகையில் நடந்துக்கொண்ட கடத்தல்காரர்கள் மற்றும் பிரதேசவாசிகளினால் கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பெரிதலவில் தாக்கப்பட்டுள்ளனர்.