ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி ஹிக்கடுவ கடலில்
 

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து மேற்கொன்டுள்ள ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி இன்று (ஜனவரி 27) ஹிக்கடுவக்கு மேற்கு கடலில் இடம்பெற்றது.

அதன் படி குறித்த பயிற்சிக்காக ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் P- C3 வகையில் 02 கடல்சார் கண்காணிப்பு விமானங்கள், கடற்படையின் 02 துரித தாக்குதல் படகுகள், இலங்கை விமானப்படையின் Y-12 வகையில் ஒரு விமானம் கழந்துகொன்டது. இப் பயிற்சிக்காக இலங்கை கடற்படையின் கடல்சார் மேற்பார்வை பற்றி சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் கழந்துகொன்டனர். மேலும் இலங்கையில் இதற்கு முன்னரும் வெளிநாட்டு விமானங்கள், கப்பல்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் விமானங்கள் பயன்படுத்தி கடலில் ஆபத்தான மக்களை கண்டுபிடிப்பு மற்றும் மீட்டெடுப்பு உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ்வாரு பயிற்சிகள் பிராந்தியத்தில் மற்ற படைகளுடன் தொழில்முறை திறன்களை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகும்.