கொழும்பு கடற்படை பயிற்சி CONEX 2019 இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது.
 

இலங்கை கடற்படை இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) இன்று (ஜனவரி 26) ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சி ஜனவரி 29 ஆம் திகதி வரை கொழும்பு கடல் பகுதியில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதன் பிராகாரமாக தொடக்க விழா இன்று இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் கடற்படை கொடி அதிகாரி கடற்படை மொடி கட்டளை ரியர் அட்மிரல் ஆனந்த குருகே தலைமயில் தொடங்கியது. இன் நிகழ்வுக்காக இயக்குனர் கடற்படை செயல்பாடுகள் கொமடோர் சந்ஜீவ டயஸ், 4வது விரைவு தாக்குதல் ரோந்து படகு குழுவின் கட்டளை அதிகாரி கேப்டன் சந்ஜீவ பிரேமரத்ன ஆகியோர் மற்றும் கடற்படை பயிற்சியின் பங்கேற்கும் அனைத்து கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் உட்பட இலங்கை விமானப்படையின் மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

இன் நிகழ்வில் உறையாடிய ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் இன் நிகழ்வில் கழந்துகொன்ட அனைத்து கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படையின் அதிகாரிகள் அன்புடன் வரவேற்ப்பதாகவும் குறித்த பயிற்சி தொழில்முறை திரன் வளர ஒரு நல்ல வாய்ப்பு என்பதாகவும் கூறினார். அதன் படி குறித்த பயிற்சியின் எதிர்கால விவகாரங்கள் பற்றி கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது.

மேலும் குறித்த கடற்படை பயிற்சி துறைமுக மற்றும் கடல் என, இரண்டு கட்டங்களில் கீழ் நடைபெற உள்ளது. அங்கு கடல் குண்டுகள் வைக்கப்பட்ட நீரில் கப்பலோட்டுதல், கடலில் வழங்கல் தேவைகள் தொகுத்தல் மற்றும் கப்பல்கள் இழுத்தல் உட்பட பல கடற்படை பயிற்சிகள் நடைபெறவுள்ளது. அதன் படி நாளை (ஜனவரி 27) முதல் கடல்சார் பயிற்சி கொழும்பு கடலில் நடைபெறும்.