இலங்கை கடலோர காவல்படைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று படகுகள் வழங்கப்பட்டன
ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கை கடலோர காவல்படைக்கு மூன்று படகுகள் வழங்கும் நிகழ்வொன்று இன்று (ஜனவரி 25) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கழந்துகொன்டதுடன் வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களும் இன் நிகழ்வில் கழந்துகொன்டுள்ளார்.
அதன் படி மூன்று படகுகளும் வழங்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வுக்கு இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்கள் கழந்துகொன்டதுடன் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு பிரைஸ் ஹச்ஸன் அவர்கள் கழந்துகொன்டார்.
பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க, கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோர் உட்பட கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் பல மூத்த அதிகாரிகள் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.