தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் வெற்றிகரமாக நிறைவு
இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையின் இன்று (ஜனவரி 18) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனவரி 03 ஆம் திகதி தொடங்கிய இப் பயிற்சி முகாம் தன்னார்வ கடற்படையினரின் தொழில் திறன் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு ஒரு காரனமாக அமைந்துள்ளது. கடற்படைத் தளபதியின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் வணக்கம் ஊர்வழத்தலும் கொன்ட இவ் விழா வர்ணமான இசைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
1952 ஆண்டில் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி 24 அதிகாரிகள் மற்றும் 121 கடற்படையினர்களுடன் தொடங்கிய இலங்கை தன்னார்வ கடற்படை தற்போது 461 அதிகாரிகள் மற்றும் 121 கடற்படையினர்களுடன் தேசிய, அவசர நிலைமைகள் மற்றும் பேரழிவுகளின் போது நிபுணர் அறிவையும், பணியாளர்களையும் எப்போதும் வழங்க தயாராக உள்ள படையனியாகும். மேலும் ஒதுக்கப்பட்ட பணிகளை செய்வதுக்கு நிரந்தர கடற்டபைடைப் பிரிவுக்கு தேவையான ஆதரவு வழங்குகின்ற பிரதான படயணியாகும்.
அங்கே வீர்ர்களை உறையாடிய கடற்படை தளபதி இலங்கை கடற்படையின் ஆரம்பம் சுயேட்சை கடற்படை என்றும் , கடந்த காலத்துக்கு மேல் இன்று சுயேட்சை கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை தமது தாய்நாட்டுக்கு நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார். மேலும், தனது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக பங்களித்து விளையாட்டு திறன்கள் முன்னெடுத்து தேசிய மற்றும் சர்வதேசமாக அவரது திறமைகளை காட்டும் சுயேட்சை கடற்படையினர்களால் இந்த நாட்டுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை பற்றி தனது மகிழ்ச்சி மற்றும் பாராட்டை தெரிவித்தார்.
மேலும் பொதுஜன சமூக அனுபவம் மற்றும் பாரம்பரிய சமூக அனுபவங்கள் கடற்படை பணி செய்யும் போது பயன்படுத்தவும் கடற்படை நெறிமுறைகள் மற்றும் மரபுகள் துறையில் நடைமுறை பயிற்சிகள் மற்றும் புரிதல் மேம்படுத்தவும் ஒழுக்கம் மற்றும் திறமையான கடற்படை உருப்பினரை உறுவாக்க குறித்த வருடாந்த முகாம் ஒரு பெரிய உதவி என்றும் கூறினார்.
இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பணிப்பாளர் நாயகங்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி கேப்டன் டோனி பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
|