அமெரிக்காவின் கடற்படை ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் பிரயின் பேஜ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன