08 நாட்கள் கொன்ட கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டம்
ஆசிய பசிபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பு (Asia pacific Alliance for Disaster Management ) மூலம் கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டமொன்று நாளை (ஜனவரி 16) முதல் எட்டு நாட்கள் கடற்படை உடனடி செயல்பாட்டுப் படகுகள் படையனி தலைமையகம் அமைந்துள்ள புத்தளம், எளுவங்குளம் கங்கேவாடிய களப்பு பகுதியில் இடம்பெற உள்ளது.
இந்த பாடநெறி இராணுவம் மற்றும் சிவில் என இரண்டு கட்டங்களில் கீழ் இடம்பெற உள்ளதுடன் ஆசிய பசிபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பு மூலம் ஆறு பயிற்சியாளர்கள் உட்பட இலங்கை கடற்படையின் ஆலோசகர்கள் கலந்து கொள்வார்கள். அதன் படி பயிற்றுவிப்பாளர்களுக்கு கல்வி கற்பதற்கான ஒரு அமர்வொன்று இன்று (ஜனவரி 15) கடற்படை உடனடி செயல்பாட்டுப் படகுகள் படையனி தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த பயிற்சித் திட்டத்திற்கு கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) உறுப்பினர்கள் உட்பட இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.