ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. வருகைத்தந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

இகசுச்சி கப்பல் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் செயல்பாடுகள் அதிகாரியான கேப்டன் ரொயொகொ இசுமா அவர்கள் மற்றும் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்தித்தார்கள். அங்கு அவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள். இன் நிகழ்வுக்காக தெக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரன்ஜித் பிரேமரத்ன அவர்கள் மற்றும் இலங்கையின் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மொரொரே (Captain Atsuhiro Morore) ஆகியோர்களும் கழந்துகொன்டனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்துக்காக வருகைதந்த இக்கப்பலில் சிப்பந்திகள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிட மற்றும் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.