ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

‍இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கர்னல் டெனிஸ் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (ஜனவரி 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

அங்கு கர்னல் டெனிஸ் ஐ. ஸ்கோடா அவர்கள் இலங்கை கடற்படையின் 23 வது புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.