இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கைது செய்துள்ள 20 இந்திய மீனவர்கள் மற்றும் காப்பாற்றியுள்ள 08 மீனவர்களும் இப்போது தொடர்புடைய பிராந்திய மீன்வள அலுவலகங்களுக்கு மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
காப்பாற்றியுள்ள மீனவர்களின் (05) பேர் மூழ்கிய மீன்பிடி படகொன்றில் இருந்து காப்பாற்றப்பட்டதுடன் அது இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையுடன் காங்கேசன்துறைக்கு எடுத்து செல்லும் போது இயந்திரம் அறைக்குள் வந்த கனரக நீர் கசிவு காரணத்தினால் இது ஒரு மூழ்கிய மீன்பிடி படகு என்று பின்னர் தெரியவந்தது.
அதே போன்ற, கடற்படை மூலம் முன் நாள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய படகுகள் கைது செய்யும் போது ஒரு இந்திய மீன்பிடி படகொன்று ஆத்திரமூட்டல் மற்றும் பாதுகாப்பற்ற கப்பல் செயல்பாடுகள் மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட போது கடற்படையின் ஒரு கப்பலின் மோதி நீரில் முழ்கியது. இது மூலம் கடற்படையின் சிறிய படகொன்றுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த இந்திய மீனவர்கள் 03 பேரும் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மீட்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் அறிவிப்பின் படி இப்பகுதியில் கடற்படையினர் தொடர்ந்தும் நடத்திய தேடுதல்களின் போது விபத்து காரணமாக காணாமல் போன இந்திய மீனவர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீன்பிடி படகுகள் ஆத்திரமூட்டல் மற்றும் பாதுகாப்பற்ற கப்பல் செயல்பாடுகளினால் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்களுக்கு சேதம் செய்து தப்பி செல்ல முயற்சிகின்தை அனுசரிக்கப்படுகிறது.
கடந்த காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீன்பிடி படகுகளினால் உள்ளூர் மீனவர்களின் வலைகள் மற்றும் பல மீன்பிடி உபகரனங்கள் சேதமடைந்துள்ளது.
எனினும் இவ்வாரு இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தடுக்கவும் உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்படும்.