சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி, போதை பொறுட்கள் விற்பனை மற்றும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடி ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி 2019 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் கொய்யத்தொட்டம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காட்டில் மறைக்கப்பட்ட 07 சீ4 மற்றும் டீ.என்.டீ கலந்த சார்ஜர்ஸ்(1,495 கிலோகிராம்), 04 மின்சார அல்லாத வெடித்தூண்டிகள் (Non Electrical Detonator) 1.5 அங்குலங்கள் கொன்ட சேப்டி பியுஸ் (Safety fuse) ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த வெடிபொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென் கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜனவரி 02 ஆம் திகதி தடெல்ல பகுதியில் இருந்து 0.5 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து மீன்பிடிக்க தடைசெய்யப்பட்டுள்ள Speargun ஒன்று மற்றும் மற்ற மீன்பிடி பொறுட்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள் மற்றும் மீன்பிடி பொறுட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் பஸ்யால பகுதியில் போதை பொறுட்கள் விற்பனை செய்த இருவர் (02) கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து 86 கிராம் ஹேரோயின் மற்றும் ஸ்கூடி வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள், போதை பொறுட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு, போதை மருந்து தடுப்பு பிரிவினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி 05 ஆம் திகதி தென் கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் காலி கலங்கரை விளக்கிலிருந்து, 04 கடல் மைல்கள் தொலைவில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட வலையொன்று மற்றும் டோலர் படகொன்றும் கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள், தடைசெய்யப்பட்ட வலை மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது