கடற்படை தளபதி அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 06) அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர். அதின் பிரகாரமாக முதலில் அநுராதபுர அடமஸ்தானாதிபதி ஷாமோபாலி மஹா நிகாய மல்வது மஹா விஹார வடக்கு திசையின் பிரதான சங்க தேரர் கலாநிதி பல்லெகம சிரிநிவாச நாயக தேரரை சந்தித்து ஆசீர்வதைத்தை பெற்றுள்ளார். அப்பொலுது கடற்படை தளபதியவர்களினால் நாயக தேரருக்கு அடபிரிகர வழங்கப்பட்டது.

மேலும் இவர்களின் தலைமையில் ஜெய ஸ்ரீ மஹா போதியில் அனைத்து கடற்படையினருக்கும் ஆசிர்வாதம் வழங்கும் பிரித் நிகழ்வொன்றும் சிறப்பாக இடம்பெற்றது.

இதன் பின் கடற்படை தளபதி உட்பட குழு அநுராதபுரம் ருவன்வெலி சைத்யக்கு சென்று அங்கு நாயக தேரர் சந்தித்து ஆசீர்வதைத்தை பெற்றுள்ளனர். இன் நிகழ்வுக்காக வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

<>