புதிய கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார். இச் சந்திப்பு வைஸ் அட்மிரல் சில்வா அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் கெளரவ பிரதமருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு ஆகும்
அங்கு கெளரவ பிரதமர் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். அங்கு இவர்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களினால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.