இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடமையேற்பு
ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் பிரகாரம் இன்று (ஜனவரி 01) காலை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ஓய்வு பெற்றுச் செல்லும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்களினால் கடற்படைத் சம்பிரதாய முறையில் பயன்படுத்தும் வாளை புதிய தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதுக்கு இணையாக புதிய கடற்படைத் தளபதிக்கி சிறப்பு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சர்வமத ஆசிர்வாதத்திற்கு மத்தியில் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க சுபவேளையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் குறித்த நிகழ்வுக்காக இவரின் மனைவி திருமதி அருந்ததி ஜயநெத்தி அவர்களும் கழந்துகொன்டார். கடற்படை கட்டளைகளின் தளபதிகள், கடற்படை இயக்குனர் ஜெனரல்கள், கொடி அதிகாரி வெளியீடு கட்டளை, திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் கழந்து கொன்டனர்.
இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கபட முன் வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடற்படை தலைமை பணியாளராக பணியாற்றினார்.