கைப்பற்றப்பட்ட 07 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 07 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (டிசம்பர் 14) இந்தியாவுக்கு மீள ஒப்படைக்கப்பட்டன. இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இப்படகுகள் கைப்பற்றப்பட்டது.
குறித்த மீன்பிடி படகுகள் 2015,2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கை கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் நிருத்திவைக்கப்பட்ட குறித்த மீன்பிடி படகுகளில் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளுக்காக கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி இந்தியாவில் இருந்து பொறியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்து படகுகள் சரிசெய்த பின் புறப்பட்டுள்ளனர். குறித்த படகுகள் காங்கேசன்துறை வடக்கு சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இலங்கை கடலோர காவற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக இலங்கை கடலோர காவற்படையின் சிஜி 402 ரோந்து படகும் இந்திய கடலோர காவல்படையின் அமேயா கப்பலும் கழந்துகொண்டது.