சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி மற்றும் வெடி பொறுட்கள் பயன்படுத்தல் ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாசமாக காலி கடற்றொழில் உதவிப் பணிப்பாளரின் அறிவிப்பின் படி உடனடியாக செயல்பட்ட தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த 04 ஆம் திகதி ரூமஸ்ஸல கடற்கரை பகுதியில் வெடி பொறுட்கள் பயன்படுத்தி சட்டவிரோதமான மீன் பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டது.

அங்கு அவர்களிடமிருந்து 01 கெனோய் வகையில் படகு, 500 கிராம் வொட்டர் ஜேல், 01 டெட்டனேடர் மற்றும் பிடிக்கப்பட்ட 15 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹபராதூவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 05 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் வங்காலே கடற்கரை பகுதியில் இறைச்சிக்காக கொல்லப்பட்ட ஆமை இறைச்சி 24 கிலோகிராம் கன்டுபிடிக்கப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வங்காலே வன பாதுகாப்பு அதிகாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி பளை தீவு தென் கடற்கரையில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவர் கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து 57 மணல் பொதிகள் மற்றும் டிங்கி படகொன்று கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள், மணல் பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைட்ஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி தென் கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டது. குறித்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.