வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்
 

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த 58 வது கேடட் ஆட்சேர்ப்பின் 34  மத்திய அதிகாரிகள் மற்றும் 56 வது கேடட் ஆட்சேர்ப்பின் 02  மத்திய அதிகாரிகள் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி இடம்பெற்றது. திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்ற கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் மரியாதைக்குரிய மகா சங்கதேரர்கள் உடபட அனைத்து மத குருமார்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க , கடற்படை பணியாளர்கள் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா,  சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை அதிபர் மற்றும் கடற்படைத் பணியாளர்களின் துணைத் தலைவர் ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க,  இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தளபதி கொமடோர் கலன ஜினதாஸ, கடற்படை தலைமையகத்தின் மற்றும் கடற்படை கட்டளைகயில் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், ,அரச அதிகாரிகள், பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இளம் அதிகாரிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், பயிற்சியின் போது தமது திறன்களை வெளிக்காட்டிய கடற்படை பயிலுனர் அதிகளுக்கான விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. அதனடிப்படையில் 58 வது கேடட் ஆட்சேர்ப்பின் அனைத்து பயிற்சிநெறிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மத்திய அதிகாரி டி.எம்.பி.பி அபேசேகர இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த  அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். சிறந்த விளையாட்டு வீர்ராக மத்திய அதிகாரி எச்.ஏ.எம் சில்வா பெற்றுள்ளார். இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த குறிவைப்பவருக்கான விரிது பீ.ஏ விஜேவிக்ரம பெற்றுள்ளார்.

இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், புதிதாக ஆணை அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளிடம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறும், கடற்படைக் கொடியை தங்கள் முன்னோடிகளை கௌரவப்படுத்துவதற்கு மட்டுமல்லாது நாட்டு மக்களை கௌரவப்படுத்துவதற்கும் பறக்கவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் பிள்ளைகளை கடற்படைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

கடற்படை கலாச்சார குழுவினரால் வழங்கப்பட்ட ஒரு வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியின் மற்றும் கடற்படை இசை குழுவால் வழங்கிய நிகழ்ச்சியின் பின்னர் கடற்படை மரபுகளுக்கு இணயாக அதிகாரியளிக்கும் நிகழ்வு நிரைவடைந்தது.  அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறிய 36 அதிகாரிகளின் 20 நிர்வாக அதிகாரிகள், பொறியியல் பிரிவுக்கான 03 அதிகாரிகள், வழங்கல் பிரிவின் 06 அதிகாரிகள், மின் மற்றும் மின்னணு பிரிவின் 03 அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை பிரிவின் 04 அதிகாரிகள் உள்ளனர்.