68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முஸ்லீம் மத சடங்குகள் கொழும்பில் இடம்பெற்றது.
 

இலங்கை கடற்படையில் 68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட முஸ்லீம் மத சடங்குகள் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சத்தாம் தெரு ஜும்மா முஸ்லீம் மசூதியத்தில் இடம்பெற்றது.

இப் மத நிகழ்ச்சியின் இலங்கை கடற்படைக்கும் கடற்படை உறுப்பினர்களுக்கும் கடவுளின் ஆசீர்வாதத்தை வழங்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு தளபதி கடற்படை காலாட்படை மற்றும் இயக்குனர் கடற்படை மரைன் ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க, மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சுதத் குருகுளசூரிய இயக்குநர் கடற்படை மருத்துவ சேவைகள் (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு), கொமோடோர் புபுது மாரம்பே ஆகியோர் கழந்துக் கொன்டனர்.

மேலும் கடற்படை முஸ்லீம் சங்கத் தலைவர், டி.பி மார்ஸோ அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர். இப் மத நிகழ்ச்சி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டனை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் நிருவனத்தின் கடற்படையினரினால் ஏற்பாடுசெய்ய்ப்பட்டது.