68 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்
2018 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவுக்காக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை கடந்த டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவரூடைய தலைமையில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படை சேவா வநிதா பிரிவின் தளபதி சந்தியா ரணசிங்க அவர்களும் கழந்துகொன்டார்.
கடற்படை ஏழாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமய விழாவில் தேசிய, பௌத்த, இலங்கை கடற்படையின் கட்டளை, நிருவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு சொந்தமான 77 கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கப்பட்டது. ஸ்ரீ மஹா போதியின் ஆசிர்வாதம் பெறுவதுக்காக ஏற்பாடுசெய்துள்ள குறித்த விழா அனுராதபுரத்தின் அத்தாமஸ்தானதிபதி, வட மத்திய மாகாணத்தின் பிரதான சங்கநாயக்க, கலாநிதி பல்லேகம சிரினிசவாசாபிமான தேரர் உட்பட மஹா சங்கத்தேரர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகலுக்காக கடற்படை பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள், வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்கள் உட்பட கடற்படை கட்டளைகளில் தளபதிகள், பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜைக்கு இனையாக கடற்படை பௌத்த சங்கம் ஏற்பாடுசெய்த கப்ருக் பூஜையும் அநுராதபுரம் ருவன்வெலி மகா சேய அருகில் இடம்பெற்றது.
Flag Blessing Ceremony
Kapruk Pooja Pinkama