இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (கொள்கை மற்றும் திட்டமிடல்), இன்ஸ்பெக்டர் ஜேனரால் வீ.எஸ் பதானியா அவர்கள் மற்றும் சமர் மற்றும் அர்யமன் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான டிபியுரிடி இன்ஸ்பெக்டர் ஜேனரால் அருனாப் பொஸ் மற்றும் டிபியுரிடி கமன்டான்ட் கரன் கிஷோர் ஆகியோர் உட்பட மூத்த அதிகாரிகள் கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இன் நிகழ்வுக்காக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் நாயகம்,கொமடோர் வய்.எம்.ஜி.பி ஜயதிலக அவர்கள் மற்றும் இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தின் உயர் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் அஷோக் ராஓ அவர்களும் கழந்துகொன்டார்.