மீன்பிடிப்படகிற்குள் சிக்கிய மீனவர் கடற்படையினரால் மீட்பு
 

திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீன் பிடிப்படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளகியத்தில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கப்பல் மஹவெலி நிருவனத்தின் கடற்படையினர் அண்மையில் (நவம்பர், 19) மீட்டுள்ளனர். அதிக பாரத்துடனான பனிக்கட்டிகளை ஏற்றிய ’ஜயவி IV’ எனும் குறித்த மீன்பிடிப்படகு எதிர்பாராதவிதமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துதனால் குறித்த மீனவர் அதற்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கடற்படை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இங்கு விரைந்த கடற்படையின் மீட்புக் குழுவினர் ஏனைய மீனவர்களின் உதவியுடன் குறித்த மீனவரை மீட்டு அவரை திருகோனமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் துறைமுகப்பகுதி நீரில் எண்ணைக்கசிவினை ஏற்படுத்தியதுடன், கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்றிணைந்து அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இக்கூட்டு நடவடிக்கையின் பிரகாரம் சுமார் 350 லீட்டர் எண்ணை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.