"கலு கங்க" நீர்த்தேக்கத்தில் கடற்படையினர் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கை
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் மாத்தளை, லக்கலை பகுதியில் அமைந்துள்ள "கலு கங்க" நீர்த்தேக்கத்தில் முழ்கியுள்ள புல்டோசரொன்றை தரைக்கு கொன்டுவருதுக்கான நீர்முழ்கி நடவடிக்கையொன்றை கடந்த 09 ஆம் திகதி தொடங்கியதுடன் குறித்த புல்டோசரை மாலுமிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

"கலு கங்க" நீர்த்தேக்கத்தில் கட்டுமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆர்.எம்.டி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த புல்டோசர் செயலிழக்க காரணமாக நீரில் முழ்கியது.  அதன்படி, அக்டோபர் 23 ஆம் திகதி ஆகும் போது குறித்த இயந்திரம் சுமார் 70 அடிக்கு தண்ணீரால் மூழ்கியது. குறித்த இயந்திரம் 28 டன் அடங்கியதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக ஆர்.எம்.டி கட்டுமான நிறுவனம் மூலம் கடற்படைக்கு அனுப்பிய கோரிக்கையின் படி கடற்படை தலைமையகத்தில் அறிவுரையுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் வலுவான முயற்சியின் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்ட பிறகு குறித்த புல்டோசரை மீடகப்பட்டது.