யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்கள் நினைவுகூர பட்டது.
தாய் நாட்டுக்காக யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (நவம்பர் 11) கொழும்பு, விகார மகா தேவி பூங்காவில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.
தாய் நாட்டுக்காக யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறி பாதுகாப்பு அமைச்சுடன் ரணவிரு சேவா ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த விழாவுக்காக பாதுகாப்புத் படைகளின் தலைமை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படைத் தலைமை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் முப்படை குறித்து பல மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கழந்து கொன்டனர்.
பிரதான நிகழ்வுக்கு இணையாக கொழும்பு, கடற்படை தலைமையகத்திலும் யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் நிகழ்வொன்று கடற்படை தலைமை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இடம்பெற்றது. மேலும் ஏனைய கடற்படை கட்டளங்களில் கட்டளைத் தளபதிகள் தலைமைல் நினைவு கூறும் நிகழ்வுகள் நடைபெற்றது. அதற்காக கடற்படையில் அனைத்து கப்பல்கள் மற்றும் நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி பல அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்துகொன்டனர். யுத்த்தில் உயிர் தியாகம் செய்த அவரது சக வீரர்களுக்கு 2 நிமிடங்கள் அமைதி கொள்கின்ற வகையில் தங்களது நன்றியை வெளியிடப்பட்ட பின் பியுகல் வாதனத்துடன் இந்நிகழ்வு முடிவடைந்தது.