சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த காரனங்களினால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆக்டோபர் 21 ஆம் திகதி கோகிலாய் பகுதியில் சட்விரோதமான வழைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவரிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு சட்டவிரொதமான வலை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மற்றும் மீன்பிடி பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதீவு மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி கடந்த அக்டோபர் 23 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நகர்கோவில் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது முழுமையாக பங்குகளுக்கு கலுட்டி மறைக்கப்பட்டுள்ள ஒரு மோட்டார் சைக்கிள் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, குறித்த மோட்டார் சைக்கிள் பகுதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸார் இனைந்து சட்டவிரோதமான வெடி பொறுட்களுடன் ஒருவர் சவுத்பார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது. அங்கு அவரிடமிருந்து 29 ஜெலட்நய்ட் குச்சிகள் மற்றும் 25 சேவை நூல்கள் (Safety Fuse) மின்சார அல்லாத வெடித்தூண்டிகள் (Non electrical Detonator) கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த சந்தேகநபர் மற்றும் கைது செய்யப்பட்ட பொறுட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் விர்ர்களினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நெடுன் தீவு வெல்லாய் பகுதி கடற்கரையில் இருந்து பத்து சந்தேகத்திற்கிடமான பொதிகள் கன்டுபிடிக்கப்பட்டது. அங்கு 51 கிலோகிராம் பாரம் கொன்ட பீடி இலைகள் கைது செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு, போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.