கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை நேற்று (செப்டம்பர் 19) கடற்படையினரினால் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
இம்மீனவர் “ரன்புதா 06" மீன்பிடி படகில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நேற்று அக்டோபர் 28 ஆம் திகதி அம்பலன்கொட மீன்பிடி துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச்சென்றிருந்தார்.
இதை பற்றி தகவல் கிடைத்த விரைவில் தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட விரைவு தாக்குதல் ரோந்து கப்பலொன்று நோயாளியை கொன்டு வர உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிரகாரமாக கடுமையான நிலையில் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 85 கடல் மைல்கள் துரத்தில் இருந்த நோயாளி விரைவு தாக்குதல் ரோந்து கப்பலின் ஏற்றிக்கொன்டு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்ட பின் மேலும் சிகிச்சைக்காக கராபிடிய போதனை மருத்துவமனைக்கு கொன்டுசௌளப்பட்டார்.