ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதலுடன் காலி கலந்துரையாடல் 2018 வெற்றிகரமாக நிறைவு
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஒம்பதாவது வருடமாக தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 23) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவடிந்தது. மேம்படுத்தப்பட்ட “ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதல்'” என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் 52 நாடுகள் மற்றும் 22 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
கடற்படை அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுதோறும் ஏற்பாடுசெய்யும் காலி கலந்துரையாடல் பிராந்திய கடல்சார் பங்காளித்துவத்தை மற்றும் உலக மட்டத்தில் பொதுவான கடல்சார் சவால் தீர்வுகளை ஆலோசிக்கிரதை பிரதான நோக்கமாக கொன்டு நடைபெறுகிறது. உலக கடல்சார் இணைப்புகளை வலுப்படுத்தும் மிக முக்கியமான காரனங்கள் பற்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த இந்த ஆண்டு மாநாடு மூலம் முடின்தது.
மேலும் நேற்று தினம் கருத்தரங்கில் “ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதல் என்ற தொனிப் பொருளில் கீழ் வெளிநாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் தங்களுடைய கட்டுரைகள் வழங்கினார்கள்.
மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய பிராந்திய வழிமுறைகளை உருவாக்குவதல் - ஜப்பான் சுய பாதுகாப்பு கடற்படை கட்டளையின் மற்றும் ஊழியர் கல்லூரியின் துணைத் தலைவர் ரியர் அட்மிரல் கேட்சுஷி ஒமவி அவர்கள்
மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண மண்டல வளங்கள் ஒருங்கிணைப்பு - பாக்கிஸ்தான் கடற்படைத் தலைமைத் தளபதி (பயிற்சி மற்றும் மதிப்பீடு) ரியர் அட்மிரல் முஹம்மத் பைய்ஸ் கிலானி அவர்கள்
மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் பற்றிய மனிதனின் பார்வையை - சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆயுத மற்றும் பாதுகாப்பு படைகளின் குழுவின் தலைவர், கென் ஹியுமி அவர்கள்
இப்பகுதியில் ஒரு துடிப்பான பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்: சவால்கள் மற்றும் தீர்வுகள் - சிதகொன்ஹி உள்ள பங்களாதேஷ் கடற்படை கொடி கட்டளையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் அஷ்ராபுல் ஹெக் அவர்கள்
துடிப்பான பொருளாதாரத்தை சுரண்டுவதற்கு வளங்களையும் திறமையையும் நிர்வகிக்கவும் - இலங்கை கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர், கலாநிதி பி.பி.டி பிரதீப் குமார
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு - இந்தோனேசிய கடற்படை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதி, ரியர் அட்மிரல் கலாநிதி அமருல்லா ஒக்டேவின் அவர்கள்
சிறந்த கடல்சார் விவகாரங்களின் விழிப்புணர்வு மூலம் கடல்சார் பாதுகாப்பு சிக்கல்களைக் குறைத்தல்: அண்மைய தொலைகாட்சிகள் மற்றும் சவால்கள் - ராயல் கனடிய கடற்படையின் கடற்படை வியூகம் இயக்குனர் கேப்டன் மெதிவு கோடஸ் அவர்கள்
கடல் தகவல்கள் பகிர்வு மற்றும் கூட்டு மூலம் கையாளுதல் - ஆஸ்திரேலிய கடற்படையின் கொடி கட்டளையின் கட்டளை அதிகாரி ஜொனதன் மெய்ட் அவர்கள்
இப்பகுதியில் உள்ள ஏற்கனவே உள்ள கடல்சார் நடவடிக்கைகளை பயன்படுத்தி இலங்கையில் தகவல் மையத்தை நிறுவுதல் - இலங்கை கடற்படையின் இயக்குனர் கடற்படை பயிற்சி மற்றும் ஹைட்ராலஜி பிரிவின் துணைத் தலைவர் கொமடோர் வை.என் ஜயரத்ன அவர்கள்
கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களால் இம் மாநாட்டில் நன்றி கதை சமர்ப்பிக்கப்பட்து. நடத்தினார். ஆண்டுதோறும் நடைபெறுகின்ற இம் மன்றம் மூலமாக மூலோபாய கடல்சார் இணைப்புகளை உருவாக்குவதல் தொடர்பாக கட்டுமான, விரிவாக்கம் பற்றிய விவாதங்கள் மற்றும் பகுப்பாய்வு புதிய பாதைக்கு வந்ததுள்ளது என்றும் அவர் மேலிம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப் மாநாட்டில் பங்குபெற்ற மற்றும் அதுக்காக ஊக்கம் குடுத்த உள்ளூர், வெலிளூர் பிரதிநிதிகள், நிறுவனங்கள் அமைப்புகளின் கல்வியாளர்களுக்கு தனது கெளரவமான நன்றியைத் தெரிவித்த ரியர் அட்மிரல் சில்வா அவர்கள் கடல்வழி இணைப்புகளை பராமரிக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விருப்பம் எல்லோருக்கும் பாதுகாப்பான நாளை தினம் கடல் பாதுகாப்பில் ஒரு ஸ்திரத்தன்மை என்று கூறினார்.அதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற சர்வதேச கடல் மாநாடு 2018 நம்பிக்கையுடன் வெற்றிகரமாக நிறைவடிந்தது.