காலி கலந்துரையாடல் 09 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து ஒம்பதாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 22) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது. இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உட்பட 52 நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் 22 சர்வதேச நிறுவனங்களிள் பிரதிநிதிகள் இந்த மாநாடுக்காக கலந்துகொன்டு இருக்கின்றனர்.

குறித்த இச் சர்வதேச கடல் மாநாட்டில் முதல் நாள் அமர்வில் தலைமை விருந்தினராக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டத்துடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரவீர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுன்தர ஆகியொர் உட்பட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரசாங்கத்தில் ஆயுதப்படைகளிள் உயர் அதிகாரிகள் ஆகியோரும் முதல் நாள் அமர்வில் பங்கேற்றனர்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் இதயங்கனிந்த வரவேற்பை நல்கினார். “ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதல்'” என்ற தொனிப் பொருளில் கீழ் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டின் வெளிநாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் தங்களுடைய கட்டுரைகள் வழங்கினார்கள்.

இந்திய பெருங்கடலில் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்குவதில் ஒத்துழைக்க வேண்டும் – சீன கடற்படையின் கடற்படை கட்டளை பாடசாலையின் தளபதி ரியர் அட்மிரல் ஹென் சியாஹு அவர்கள்

இந்தியப் பெருங்கடலில் கடல் பாதுகாப்பு வழங்குவதற்கு ரஷ்ய கடற்படை பொறுப்பு – ரஷ்ய கடற்படையின் கொடி கட்டளை பிரதானி ரியர் அட்மிரல் லுக் என்டியர் அவர்கள்  

கடல் நடவடிக்கைகள் பற்றிய அமெரிக்க பார்வை - ஐக்கிய அமெரிக்க கடற்படையின் 07 வது நீர்மூழ்கி குழுவின் தளபதி, 54/74 ஐக்கிய அமெரிக்க கடற்படை பணிக்குழுவின் கட்டளை அதிகாரி, ரியர் அட்மிரல் ஜேம்ஸ் பீட்ஸ் அவர்கள்

தெற்காசிய கடல்சார் விவகாரங்கள் கட்டுப்பாடு - சர்வதேச மரைன் அமைப்பின் பங்கு என்ன?- சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனம் கலாநிதி ஜிவந்தா ஸ்கூட்லி அவர்கள்

சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் உள்நாட்டுச் சட்டங்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறைக்க - போதை மருந்து துஷ்பிரயோகம் தொடர்பான ஐக்கிய நாடு அலுவலகத்தின் சர்வதேச கடல்சார் குற்றங்கள் திட்டங்கள் பிரதானி எலன் கோல் அவர்கள்

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தில் கடல் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவை மேம்படுத்தும் வழிமுறைகள்- தேசிய கடல்சார் அமைப்பின் தலைவர் மற்றும் இந்திய கடற்படையின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு) ஆர்.கே.தோவான் அவர்கள்

பிராந்திய கடல் பிரச்சினைகளை இந்திய பெருங்கடலில் ஒருங்கிணைக்க முடியுமா? மலேசிய கடற்படையின் மனித வளங்கள் பணியாளர்களின் உதவி தலைமை, அட்மிரல் அனுஆ பின் முகம்மது அவர்கள்

பிராந்திய கடல் பிரச்சினைகளை இந்திய பெருங்கடலில் ஒருங்கிணைக்க முடியுமா? - இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான  பிரெஞ்சு படைகளின் ஒருங்கிணைந்த கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் டிடியர் மெலெதெ அவர்கள்

மேலும் இன் நிகழ்வில் கழந்துகொன்ட அதிமேதகு ஜனாதிபதி உட்பட விருந்தினர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்களால் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அமர்வுகளும் முடிந்த பின் கடற்படைத் தளபதி அவர்களயினால் அனைத்து விரிவுரையாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மிகவும் வெற்றிகரமாக காலி கலந்துரையாடல் சர்வதேச கடல் மாநாட்டில் முதல் நாள் அமர்வு முடிக்கப்பட்டது.  இரண்டாவது நாளான இன்று காலி கலந்துரையாடல் சர்வதேச கடல் மாநாட்டு 2018 முடிவடயும்.