“காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாடு- 2018 ” ஊடக விழிப்புணர்வு
 

காலி பேச்சுவார்த்தை – 2018 சர்வதேச கடல்சார் மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (அக்டோபர் 16) கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பியால் த சில்வா அவருடைய தலைமையில் கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இம்மாநாடு இம்முறை “ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதல்” (Synergizing for collaborative maritime management) என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது. இம்மாதம் எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கடற்படையின் பிரதம அதிகாரி மேலும் விளக்கமளிக்கையில் 9 ஆவது வருடம் நடத்தவுள்ள இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பெருமளவிலான உள்நாட்டு கடல்துறைசார் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இலங்கை உட்பட உலகின் எந்த நாட்டிற்கும் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தனித்து செய்ய முடியாது. மாறாக ஒன்றிணைந்த செயற்பாடுகளின் மூலம் மாத்திரமே மேற்கொள்ள முடியும். இதற்கு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புக்கு படையினரின் ஒத்துழைப்பு, புலனாய்வு தகவல்கள், அனுபவ பரிமாற்றம் போன்றன இன்றியமையாத ஒன்றாகும் என்று கூறினார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கடற்படை ஒன்றாக இணைந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவருடைய தலைமையில் ஒழுங்குபடுத்தும் குழு மாநாடு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இந்த நாட்களில் இது மிகவும் நன்றாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.

கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல, கடல் நடவடிக்கைப் பணிப்பாளர் கொமடோர் சஞ்ஜீவ டயஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டுக்கு பல்வேறு மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.