கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை தேடி கடற்படை மேற்கொன்டுள்ள நடவடிக்கை
தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட துரித தாக்குதல் படகொன்று மூலம் இன்று (செப்டம்பர் 12) காலி கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகொன்றை மீட்பதக்கான நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.
காலி கலங்கரை விளக்கிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகொன்று மூழ்கி இருக்கிறதாக முழ்கிய கப்பல் அருகில் பயணித்துக்கொண்டிருந்த வணிக கப்பல் மூலம் கொழும்பு கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கு (Maritime Rescue Coordinating Centre - MRCC) தெரிவித்த பின் உடனடியாக இன்று காலை தென் கடற்படை கட்டளையின் அதிவிரைவு தாக்குதல் படகு மூலம் கடற்படை நீர்முழ்கி பிரிவின் கடற்படையிர்கள் குறித்த கடல் பகுதிக்கு சென்றனர்.
அதன் பிரகாரமாக துரித தாக்குதல் படகு மூலம் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒருவரின் உயிரை காப்பாற்ற முடிந்தது. அவருடன் ஆறு மீனவர்கள் இருந்த்தாக காப்பாற்றபட்ட மீனவர் கடற்படையினருக்கு கூறினார். உடனடியாக செயல்பட்ட கடற்படை நீர்முழ்கி பிரிவின் கடற்படையிர்கள் குறித்த இடத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர். இச் சோதனை நடவடிக்கைன் போது இறந்த 04பேருடைய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல்போன மற்ற மீனவர்கள் தேடும் பணிகள் மேலும்தொடர்கின்றன.
மேலும் காப்பாற்றபட்ட மீனவரை பாதுகாப்பாக காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பின் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். உடல்கள் மேலதிக விசாரணைக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் இலங்கைக்கு சொந்தமான கடல் பயன்படுத்தும் வணிக கப்பல்கள், மீன்பிடி படகுகள் மற்றும் பல்வேறு கடல் ஆய்வுகள் மேற்கொள்கின்ற அவர்களுக்கு ஏற்படுகின்ற விபத்துகளுக்கான உடனடி அவசர அழைப்பு மையம் இதுவாகும். இந்த மையத்தை நிறுவிய பிறகு இலங்கை கடற்பரப்பில் பல விபத்தான கப்பல்கள் மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தல் மூலம் மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்கு சிறந்த சேவையை வழங்குகிறது.