இந்தோனேஷியா கடற்படையின் “க்ரி சுல்தான் ஹசானுடின் ' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேஷியா கடற்படையின் “க்ரி சுல்தான் ஹசானுடின்’’ கப்பல் இன்றையதினம் (செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது. வந்தடைந்த இக்கப்பளுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் இந்தோனேசிய தூதரகத்தின் அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் செசெப் ஹிதயாட் (Commander Cecep Hidayat) உட்பட குழுவினர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த இக் கப்பலின் 120 குழுவினர் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நட்பு கைப்பந்து போட்டிகளில் மற்றும் திட்டங்களில் கழந்துகொள்வார்கள். குறித்த இக் கப்பல் எதிர் வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.