இலங்கை கடற்படை மூலம் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் கடலோரப் காவல்படைக்கு வழங்கப்பட்டது
வெலிசறை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடலோர ரோந்து படகுகள் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்ட இரன்டு கடலோர ரோந்து படகுகள் உத்தியோகபூர்வமாக இலங்கை கடலோர காவல்படைக்கு ஒப்படைப்பு நேற்று (செப்டம்பர் 07) கொழும்பு, துறைமுக வளாகத்தில் இடம்பெற்றது. அதன் பிரகாரமாக இன் நிகழ்வுக்கு இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்களும் கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களும் கழந்துகொன்டார்கள்.
15 மீட்டர் நீளம் மற்றும் 3.5 மீட்டர் அகலத்தைக் கொண்ட இப் படகுகள் ஒரு மணி நேரத்திற்கு 35 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்யும் வசதி கொண்டுள்ளது. இலங்கை கடலோரப் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்ட இப் படகுகள் சீஜி 209 மற்றும் சீஜி 210 ஆக பெயரளிக்கப்பட்டது. மேலும் குறித்த படகுகள் 80 மில்லியன் செலவில் நவீன அம்சங்களுடன் வெலிசறை கடலோர ரோந்து படகுகள் தயாரிக்கும் திட்டம் மூலம் இலங்கை கடற்படை தொழில்நுட்பம் மற்றும் கடற்படை பொறியாளர்களுடைய மேற்பார்வையின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் காவல்படையின் 2016 மற்றும் 2018 ஆண்டுகளுக்கான மூன்று ஆண்டு திட்டத்தின் கீழ் கடற்படைச் சட்டத்தை அமல்படுத்துவதை மேம்படுத்துவதற்கு குறித்த கப்பல்கள் பயன்படுத்தப்படும்.
இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல ஆகியோர் உட்பட கடற்படை தலைமையகம், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை கடலோரப் காவல்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படையினர்கள் கழந்துகொன்டனர்.