மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படையின் சுமித்ர, கர்ச் மற்றும் கோராதிவு ஆகிய கப்பல்கள் இன்று (செப்டம்பர் 07) திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. வருகைதந்த இக் கப்பல்கலை இலங்கை கடற்படையினரினால் பாரம்பரிய மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டது.
கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்த பின் சுமித்ர மற்றும் கர்ச் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் சத்ய குரு மற்றும் கொமான்டர் ரோபின் சக்ரவோர்த்தி ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
105.3 மீட்டர் நீளம் மற்றும் 12.9 மீட்டர் அகலத்தைக் கொண்ட சுமித்ர கப்பலில் 230 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதியை கொண்டுள்ளது. 91.1 மீட்டர் நீளம் மற்றும் 10.5 மீட்டர் அகலத்தைக் கொண்ட கர்ச் கப்பலில் 230 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் 48.9 மீட்டர் நீளம் மற்றும் 7.5 மீட்டர் அகலத்தைக் கொண்ட கோராதிவு கப்பலில் 175 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதியை கொண்டுள்ளது.
மேலும் குறித்த கடற்படை பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் தென் கடற்படை கட்டளைக்கு கட்டளை வழங்கும் பிரதான கொடி அதிகாரி ரியர் அட்மிரல் தினேஷ் கே த்ரீபதி அவர்கள் இன்று கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். மேலும் கடற்படை கொடி கட்டளை அலுவலகத்தில் வைத்து கொடி கட்டளையின் கட்டளை அதிகாரி ஆனந்த குருகே அவர்களையும் சந்தித்தார். மேலும் இன் நிகழ்வுகள் நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இந்திய இலங்கையின் இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் அஷோக் ராஓ அவர்களும் கழந்துகொன்டார்.