வெற்றிகரமான விஜயத்தின் பின் 'அன்கோரேஜ்' அமெரிக்க கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

பயிற்சி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த 'அன்கோரேஜ்' எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் கடந்த ஆகஸ்ட் 28அம் திகதி நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. இக்கப்பல் கடந்த 24ம் திகதியன்று நான்கு நாட்களைக் கொண்ட உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

அதன் பிரகாரமாக குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரையின் படையினருடன் இணைந்து கடந்த 25 ஆம் திகதி சாம்பூரில் உள்ள மரையின் தலைமையகத்தில் கவச வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், நகர்ப்புற நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கி சூடுகள் ஆகிய பல கூட்டுப்பயிற்சிகள் மேற்கொன்டுள்ளனர். இன் நிகழ்வுக்காக மரையின் படையின் நிறுவனர் தற்பொலுது முப்படையின் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.

மேலும், திருகோணமலை கடற்கரையில் 'அன்கோரேஜ்' கப்பலின் ஊளியர்கள் மற்றும் சிறப்பு படகு படையின் வீர்ர்கள் இனைந்து கடல் பயிற்சிகள் மேற்கொன்டுள்ளனர். இது மூலம் இலங்கை கடற்படையினருக்கு நீர் பயிற்சிகள் பற்றி அறிவு மற்றும் பயிற்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி 'அன்கோரேஜ் கப்பலுக்குள் தீ அனைப்பு மற்றும் பேரழிவு முகாமைத்துவம் தொடர்பாக சிறப்பு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றதுடன் இதுக்காக பல கடற்படையினர்கள் கழந்துகொன்டனர். இக் கப்பல் இலங்கையில் இருந்த காலத்தில் கப்பலின் குழுவினர் இலங்கையில் முக்கியமான தளங்களுக்கு சென்றதுடன் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த நல்லெண்ண கைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகளில் கழந்துகொன்டார்கள்.

அதே போன்ற அன்கோரேஜ் கப்பல் புரப்படும் போது இலங்கை கடற்படை கப்பல் சுரனிமிலவுடன் இனைந்து பல கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு புறப்பட்டது.